சவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள்

சவகர் சிறுவர் மன்றம் சார்பில்  மாவட்ட அளவில் கலைப் போட்டிகள்
X

பைல் படம்

திருச்சிராப்பள்ளி கலை பண்பாட்டுத்துறை மண்டலக்கலை பண்பாட்டு மையம் , புதுக்கோட்டை ஜவகர் சிறுவர் மன்றம் இணைந்து நடத்துகின்றன

திருச்சிராப்பள்ளி கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டு மையம் , புதுக்கோட்டை, ஜவகர் சிறுவர் மன்றம் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் 2022-2023. நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய 2 நாட்களில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணிவரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் போன்ற கலைப் பயிற்சிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசினர் உயர் துவக்கப்பள்ளி வடக்கு ராஜ வீதி புதுக்கோட்டையில் (டவுன் ஹால் எதிரில்) நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை), குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும் இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இராண்மிடம் மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்

பரத நாட்டியம் (செவ்வியல் கலை), பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும் திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை பக்கவாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம் இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ளவேண்டும். அதிகபட்டிசம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்

கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை), தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடம் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை பகவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவற்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும் அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.

குரலிசை போட்டி, கர்நாடக இசை தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கத்திய இசை திரையிசைப் பாடல்கள், குழப்பாடல்கள் அனுமதியில்லை. அதிபட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஒலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.

ஓவியப் போட்டி, 40×30 செ.மீ அளவுள்ள ஓவியக் தாள்களையே பயன்படுத்தவேண்டும். பென்சில் கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பேயிண்டிங் என எவ்வகையிலும் ஓவிங்கள் அமையலாம். ஓவியத்தாள் வண்ணங்கள்தூரிகைகள் உள்பட் தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும் இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவியர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் அரசினர் உயர் துவக்கப்பள்ளி வடக்கு ராஜ வீதி புதுக்கோட்டை (டவுன் ஹால் எதிரில்) என்ற இடத்தில் 05.03.2023 அன்று காலை 9.00 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மா.செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?