மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதுக்கோட்டை யில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்
புதுக்கோட்டையில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மா.செல்வி முன்னிலையில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் (03.03.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மருத்துவர்கள் தெரிவித்த தேவைகள் அனைத்தும் நிறைவேற்றிடும் வகையில், பொதுமக்களின் உடல் நலனில் அக்கரைக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவத்துறைக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், உயிர்காக்கும் உபகரணங்கள், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவைகள் நிறைவேற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் ‘நமக்கு நாமே” திட்டத்தின் மூலம் பொதுமக்களின் பங்களிப்புடன் தேவையான பகுதிகளில் மருத்துவத்துறை கட்டமைப்பு வசதிகள் வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவப் பணிகள் அனைத்து தொய்வில்லாத வகையில் செயல்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான உயர் தரத்திலான சிகிச்சைகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இத்தகைய நலத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனசட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி, துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) மரு.ச.இராம்கணேஷ், மரு.கலைவாணி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu