/* */

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
X

பைல் படம்

புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த சோதனைக்கு சம்பந்தப்பட்ட 10 பேர் தரப்பில் நீதிபதி ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டல் நடைமுறைகளை மனுவாக தாக்கல் செய்யசி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் கடந்த 8-ஆம் தேதி வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குமார், உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது எப்படி? என்பது குறித்து நீதிபதியிடம் கூறினார். இந்த சோதனையில் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்த துன்புறுத்தலும் இருக்காது என்றார்.

மேலும் வழக்கின் புலன் விசாரணை அதிகாரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், அதனால் அவர் நீதி்மன்றத்துக்கு வரவில்லை எனவும் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை 21-ந் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்தி வைத்தார். அதன்படி, இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை அதிகாரி தொடர்ந்து விடுப்பில் உள்ளதால் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையைவரும் ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்து உத்தவிட்டார்.

Updated On: 21 Dec 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு