/* */

சிறைத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் : அமைச்சர் ரகுபதி

கடலூரில் சிறை அலுவலர் வீடு தாக்கப்பட்டிருக் கிறது. தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்

HIGHLIGHTS

சிறைத்துறை ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் : அமைச்சர் ரகுபதி
X

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி(பைல் படம்)

சிறைத் துறை பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் மாநில சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக் கப்படும். தமிழக அரசு விழிப்போடு இருந்ததால்தான் தமிழகத்தில் எங்கெல்லாம் கஞ்சா புழக்கத்தில் இருந்ததோ அவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் சிறை அலுவலர் வீடு தாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் சிறைத்துறையில் இருக்கக்கூடிய சிறைக் காவலர்கள்தான். இது வெளி உலகுக்குத் தெரியாது. பல வழக்கு களில் குற்றவாளிகள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்தான் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் குற்றம் புரிவதற்கு தயங்குவது கிடையாது.

அவர்களோடு இருக்கக்கூடிய சூழ்நிலையில் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிக் கொண்டுதான் சிறையில் பணியாற்று கிறார்கள். அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கொடுப்பதற்கும், அவர்களது குடும்பத்தைக் காப்பதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சிறைப் பணியாளர்களிடம் பயங்கரமான செயல்களில் ஈடுபடக் கூடிய கைதிகளை கண்காணித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ரகுபதி.

Updated On: 2 Sep 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு