/* */

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு

புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பை ஏற்படுத்துவது குறிதது விளக்கம் அளிக்கும் காணொலி காட்சி காட்டப்பட்டது.

HIGHLIGHTS

முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொலி மூலம் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு
X

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை முழுமையாக முறையாக அணிய வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு காணொலிக் காட்சியை நேற்று வெளியிட்டார்

அதில் மூக்கு மற்றும் வாய் முறையாக மறைத்து முக கவசத்தை அணியவேண்டும் தாடை பகுதிகளில் முகக் கவசத்தை அணிந்து கொள்ளக் கூடாது தற்போது மருத்துவர்கள் அறிவுரையின்படி இரண்டாவது அலை மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால்

அந்த கொரோனா என்ற தொடர் சங்கிலியை உடைத்தால் மட்டுமே நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் அதற்காக அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு தவிர்க்க முடியாத காரணங்களாக செல்லும் பொதுமக்கள் இரண்டு முக கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும் என்றும் கிருமி நாசினி மருந்துகளை பயன்படுத்தி கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிமூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்

இன்று புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள காணொளியை எல்இடி திரையில் ஒளிபரப்பி முகக்கவசம் எவ்வாறு அணிய வேண்டும் என்பது குறித்து காணொலியை மக்கள் தொடர்பு துறையின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த பொதுமக்களும் தமிழக முதல்வர் பேசிய காணொலியை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்

Updated On: 20 May 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!