/* */

300 கிலோ நெல் மணிகளால் உருவான கலாம்; ஓவியம் வரைந்து மாணவர் சாதனை

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, 300 கிலோ நெல் மணிகளால் ஓவியம் வரைந்து மாணவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

HIGHLIGHTS

300 கிலோ நெல் மணிகளால் உருவான கலாம்; ஓவியம் வரைந்து மாணவர் சாதனை
X

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்பவருடைய மகன் நரசிம்மன். இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆர்க்கிடெக் பயின்று வருகின்றார்.

தன்னுடைய இளம் வயதிலேயே ஒவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு ஓவியப் படைப்புகளை வரைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வாலிகண்டபுரம் கிராமத்தில் 30 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட துணியில் 300 கிலோ நெல் மணிகளால் அப்துல் கலாம் அவர்களின் ஒவியத்தை கலை நயத்தை படைத்துள்ளார்.

கல்லூரி மாணவரின் சாதனை ஓவியத்தை, பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து விட்டு சென்றனர். மேலும் இந்த சாதனை முயற்சி 'கலாம் புக் ஆப் ரெக்கார்டு' புத்தகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சாதனை முயற்சியை இரண்டரை மணி நேரத்தில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 July 2021 4:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!