/* */

பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.12.21 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர்: கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
X

பைல் படம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் இன மாணவ, மாணவிகளுக்கு இந்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க 15.12.2021 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021 என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2021 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்