/* */

பெரம்பலூர் நீலியம்மன் கோயில் ஏரி நீரை மலர் தூவி வரவேற்ற எம்.எல்.ஏ.

பெரம்பலூர் நீலியம்மன் கோயில் ஏரி நீர் நிரம்பி வழிந்ததால் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மலர் தூவி வரவேற்றார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் நீலியம்மன் கோயில் ஏரி நீரை மலர் தூவி வரவேற்ற எம்.எல்.ஏ.
X

நிரம்பி வழிந்த பெரம்பலூர் நீலியம்மன் கோயில் ஏரி தண்ணீரை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மலர் தூவி வரவேற்றார்.

தமிழகம் முழுவதும் பரவலாக தற்போது பெய்து வரும் தொடர் மழையால், பெரம்பலூர் அடுத்துள்ள செஞ்சேரி ஏரி நிரம்பி தண்ணீரானது நீலியம்மன் கோவில் ஏரிக்கு வந்தடைந்தது. மிகப்பெரிய கொள்ளளவு கொண்ட ஏரி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்றிரவு ஏரியின் முழு கொள்ளளவையும் தாண்டி தண்ணீர் நிரம்பி கடைக்கால் பகுதி வழியாக வெளியேறி வருகிறது.

இந்த தண்ணீரானது, பெரம்பலூர் மருத்துவமனை எதிரில் உள்ள பெரிய ஏரிக்கு வருவதால் அந்த ஏரியும் நிரம்பி தற்பொழுது கடைமடை வழியாக வெளியேறி தண்ணீர் அனந்தமங்கலம் ஏரிக்கு செல்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் இதேபோன்று ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் சிறுவர்கள் பொது மக்கள் உற்சாகத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரனாரை நீலியம்மன் பெரிய ஏரி நிரம்பியதை அறிந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நிரம்பிய ஏரி பகுதியில் உள்ள மதகில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அரனாரை துரை காமராஜ், முன்னாள் கவுன்சிலர் அரனாரை ஜெயகுமார் ,திருமாந்துறை ராணி மோட்டர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் உள்பட கலந்து கொண்டனர்.

Updated On: 17 Nov 2021 1:54 PM GMT

Related News