கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி கலெக்டரிடம் மனு

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும்    இடத்தை மாற்றக் கோரி கலெக்டரிடம் மனு
X

பைல் படம் 

எருமப்பட்டி பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

நாமக்கல்,

எருமப்பட்டி பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதஉ மேலும், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை சுற்றிலும், நன்கு பயிர் விளையக் கூடிய விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலம் உள்ள பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தால், அப்பகுதியில் உள்ள 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.

அதேபோல், அப்பகுதி சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், விவசாயம் பாழ்படுவதுடன், குடிநீர் மாசடையும். இது தொடர்பாக, 2024, ஜூன் 28, கடந்த, பிப்ரவரி 19 ஆகிய நாட்களில், நாமக்கல் கலெக்டர், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர், தலைவர் ஆகியோரிடம் மனு அளித்து, இடத்தை மாற்றி அமைக்க கோரி மனு அளித்துள்ளோம். எனவே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story