இ.பி.எஸ். பிறந்தநாள் விழாவில், திண்டலில் தங்கத்தேர் வழிபாடு! அ.தி.மு.க.வினர் பக்திபூர்வ கொண்டாட்டம்!

திண்டல் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு :
இ.பி.எஸ். பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க.வினர் பக்திபூர்வ கொண்டாட்டம் : தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) அவர்கள் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் சிறப்பான வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரியம்பாளையம் பகுதி அ.தி.மு.க. கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தங்கத்தேர் இழுத்து மூலவரை வழிபடும் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
முன்னாள் துணை மேயரும், பகுதி செயலாளருமான பழனிச்சாமி தலைமையில் தேரிழுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதில், பகுதி செயலாளர்கள் மனோகரன், ஜெகதீசன், தங்கமுத்து, ஈஸ்வரமூர்த்தி, கோவிந்தராஜ், பழனிச்சாமி மற்றும் சித்தோடு பேரூராட்சி முன்னாள் தலைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu