கூனவேலம்பட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

கூனவேலம்பட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு
X
கூனவேலம்பட்டியில், விவசாயிகளின் பால் சேமிப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக, ரூ.21.76 லட்சம் செலவில் புதியதாக பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

கூனவேலம்பட்டியில் புதிய பால் குளிரூட்டும் நிலையம் திறப்பு

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயிகளின் பால் சேமிப்பு பிரச்சனைகளுக்கு தீர்வாக, ரூ.21.76 இலட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட பால் குளிர்விக்கும் நிலையம் கூனவேலம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன வசதியுடன் கூடிய தொகுப்புமையத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா திறந்து வைத்தார்.

இது, பாலை சேமித்து, நல்ல தரத்துடன் விற்பனை செய்யவும், காசோலை வழியாக நேரடி வருமானத்தை உறுதி செய்யவும் பால் உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். நிகழ்வில், நாமக்கல் எம்.பி. ராஜேஷ்குமார், இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய கழக செயலாளர் ஜெகநாதன், மாவட்ட திமுக பொருளாளர் பாலசந்தர், பேரூர் கழக செயலாளர் மற்றும் சேர்மன் சுப்ரமணியம், ஆவின் பொது மேலாளர் சண்முகம், துணை பதிவாளர் (பால் வளம்) சண்முகநதி உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர். இந்த திட்டம், பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு உரிய பதிலாக அமைந்துள்ளது.

Tags

Next Story