ச.பே.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி: எம்.பி., துவக்கம்

ச.பே.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி: எம்.பி., துவக்கம்
X

பட விளக்கம் : நாமக்கல், ச.பே.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியினை, ராஜேஷ்குமார் எம்.பி., துவக்கி வைத்தார்.

நாமக்கல் ச.பே.புதூரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியை, ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.

ச.பே.புதூரில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணி: எம்.பி., துவக்கம்

நாமக்கல்,

நாமக்கல் ச.பே.புதூரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணியை, ராஜேஷ்குமார் எம்.பி. துவக்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 36வது வார்டு, ச.பே.புதூரில், ராஜேஷ்குமார் எம்.பியின், பார்லி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில், புதிய அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை விழா, மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் மகேஷ்வரி, துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு, புதிய அங்கன்வாடி கட்டிடத்திற்கான கட்டுமானப்பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள் சிவகுமார், டாக்டர் விஜய் ஆனந்த், ஈஸ்வரன், இளம்பரிதி, தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!