கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த் திருவிழா : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த் திருவிழா :    ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
X

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த்திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த்திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

கீரம்பூர் எட்டுக்கையம்மன் கோயில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம்பிடித்து தேர் இழுத்தனர். (உள்படம்) தேரில் அருள்பாலித்த எட்டுக்கை அம்மன்.

நாமக்கல்,

கீரம்பூர் எட்டுக்கையம்மன் தேர்த்திருவிழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர்.

நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற எட்டுக்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த மே 6ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி காலையும் மாலையும் சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதணை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது..

தேர்த்திருவிழா சிறப்பு நிகழ்ச்சியாக மே 15ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை முதல், கோயில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையல் இட்டு வழிபட்டனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு, சுவாமி உற்சவர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். இரவு 8 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. நேற்று 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்கழுவினர் மற்றும் கொங்கு வேளாளர் பண்ணைகுல குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்