நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கனமழை கூல் கிளைமேட்டால் மக்கள் மகிழ்ச்சி : இடி தாக்கியதால் பசுமாடு உயரிழப்பு

கொல்லிமலையில் இடி தாக்கியதால் உயிரிழந்த பசுமாடு.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கடும் வெயில் நிலவி வருகிறது. இதனால் தொடர்ந்து 100 முதல் 104 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் பொதுமமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பெரும் சிரப்பட்டு வருகின்றனர். வெப்பத்தை சமாளிக்கும் வகையில் கரும்பு சாறு, பழரசம், வெள்ளரி, தர்ப்பூசணி, நுங்கு போன்றவற்றை பலரும் விரும்பி வாங்கி உண்டு வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை மாலை நாமக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக பல இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து கூல் கிளைமேட் நிலவியது. இரவு வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதன்கிழமை மாலை சேந்தமங்கலம் மற்றும் கொல்லிமலைப் பகுதியில் இடியுடன் கன மழை பெய்தது. இதில் கொல்லிமலை சுள்ளுக்குழிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவரின் பசு மாடு, இடி தாக்கி பரிதாபமாக உயரிழந்தது. மற்றொரு பசு மாடு காயமைடந்தது. விவசாயி ராஜேந்திரனின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு இறந்ததால், அவருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று 15ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம்:
நாமக்கல் நகரம் 17.50 மி.மீ, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 10 மி.மீ., எருமப்பட்டி 20 மி.மீ., மங்களபுரம் 16 மி.மீ., மோகனூர் 16 மி.மீ, ப.வேலூர் 5.50 மி.மீ., புதுச்சத்திரம் 7 மி.மீ., ராசிபுரம் 3 மி.மீ., சேந்தமங்கலம் 51 மி.மீ., திருச்செங்கோடு 92 மி.மீ., கொல்லிமலை 30 மி.மீ. மாவட்டத்தில் மொத்தம் 268 மி.மீ., மழை பெய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu