ஆதார் அட்டை டிஜிட்டல் மயமாகிறது - நவீன ஆதார் மொபைல் செயலி

ஆதார் அட்டை டிஜிட்டல் மயமாகிறது - நவீன ஆதார் மொபைல் செயலி
X
புதிய ஆதார் மொபைல் செயலி மூலம் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மேலும் ஒரு பெரிய முன்னேற்றத்தைச் செய்துள்ளது

ஆதார் அட்டை டிஜிட்டல் மயமாகிறது - நவீன ஆதார் மொபைல் செயலி

மத்திய அரசு டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மேலும் ஒரு பெரிய முன்னேற்றத்தைச் செய்துள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள புதிய ஆதார் மொபைல் செயலி, பயனர்களுக்கு தங்களது ஆதார் தகவல்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் பகிரவும், பயன்படுத்தவும் வழிவகுக்கிறது. இந்த செயலியில், பயனர்கள் தங்களை நேரடியாக டிஜிட்டல் முறையில் அங்கீகரித்து, மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் ஆதார் தகவல்களை தேவையான தரப்புகளுக்கு அனுப்பக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஆதார் அட்டையை உடன் கொண்டு செல்வது, அதற்காக ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற காலம் முடிவுக்கு வருகிறது. புதிய செயலி ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி, தனிப்பட்ட உரிமையை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த செயலி சோதனை நிலையில் உள்ளதாலும், விரைவில் பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் டிஜிட்டல் அடையாளத்தை பாதுகாப்பாகவும் சீராகவும் பரிமாறிக்கொள்ளும் ஒரு புதிய யுகம் இந்த செயலியின் வழியாக தொடங்கப் போகிறது என்பது உறுதி.

Tags

Next Story