ஈரோட்டில் நீரில் மூழ்கி 41 பேர் பலி – ஈரோட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மக்கள் மத்தியில் அதிர்ச்சி!

ஈரோட்டில் நீரில் மூழ்கி 41 பேர் பலி – ஈரோட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! மக்கள் மத்தியில் அதிர்ச்சி!
X
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் கிணறுகளில் மூழ்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்

ஈரோடு மாவட்டத்தில் நீரில் மூழ்கி 41 பேர் உயிரிழப்பு – மக்கள் மத்தியில் அச்சம் :

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள் மற்றும் கிணறுகளில் மூழ்கி மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது பதறவைக்கும் தகவலாக வெளியாகியுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை இந்த தகவலை உறுதி செய்துள்ளது.

ஈரோடு, பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, மற்றும் மொடக்குறிச்சி உள்ளிட்ட 11 தீயணைப்பு நிலையங்களின் கணக்கெடுப்பின்படி, நீர் நிலைகளில் மூழ்கிய 13 பேர் பத்திரமாக காப்பாற்றப்பட்டதுடன், 93 கால்நடைகளும் மீட்கப்பட்டன. 11 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

மேலும், தீ விபத்து சம்பவங்களும் அதிகரித்து, ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை 1,174 குறித்த அழைப்புகள் வந்துள்ளன. இதில் 436 சம்பவங்கள் பதிவாக, பெரும்பாலானவை சிறிய தீ விபத்துகளாக இருந்தன.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story