மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி

மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகள்  குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி
X

பைல் படம்

வேளாண் அறிவியில் நிலையத்தில் நாளை 15ம் தேதி காலை 10 மணிக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியில் நிலையத்தில் (கேவிகே), நாளை 15ம் தேதி காலை 10 மணிக்கு மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், மண் மற்றும் நீர் பாதுகாப்பு வழிமுறைகளின் முக்கியத்துவம், மண் அரிப்பை தடுத்தல், நீர் ஊடுருவலை மேம்படுத்துதல், கோடை உழவு, மழைநீரை சேகரித்தல், நீர் வளங்களை பாதுகாத்தல், மண் வளத்தை பராமரிக்கும் முறைகளான பயிர் மூடாக்கு, பயிர் சுழற்சி முறை, அங்கக உரமிடல் பற்றியும், நீர் மேலாண்மை முறைகளான நுண்ணீர் பாசனம், நீர்வடிப் பகுதி மேம்பாடு, -பண்ணைக்குட்டை அமைத்தல், வடிகால் தொழில் நுட்பம், மண்ணில் நீரை தக்க வைக்கும் முறைகள், பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப நீர் பாசன அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில், விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளாலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் 04286- 266345 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகெண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் என வேளாண்மை அறிவியில் நிலைய தலைவர் டாக்டர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Next Story