தண்ணீருக்காக வந்த புள்ளிமான் கிணற்றில் மரணம்

தண்ணீருக்காக வந்த புள்ளிமான் கிணற்றில் மரணம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஆலாம்பட்டி, வளையப்பட்டி பகுதிகளில் புள்ளிமான்களின் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இவ்வகையில், ஆலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் புள்ளிமான் ஒன்று இறந்து மிதந்துகிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வந்தவிவரம் அறிந்து, நாமக்கல் வனத்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் இருந்து புள்ளிமானின் சடலத்தை மீட்டனர். அதன் பிறகு, மரணத்திற்கு காரணம் அறிய பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புள்ளிமான் இரவு நேரத்தில் தண்ணீர் தேடிக் கிணற்றில் தவறி விழுந்ததா, அல்லது தெருநாய்கள் விரட்டியபோது தப்பிக்க முயன்று கிணற்றில் வீழ்ந்ததா என்ற கோணத்தில் வனத்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பரிதாபமான சம்பவம், வனவிலங்குகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து புதிய கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu