2 கோடி கிலோ உற்பத்தி சரிவால் பிராய்லர் கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.20 உயர்வு

Namakkal news- 2 கோடி கிலோ உற்பத்தி சரிவால் பிராய்லர் கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.20 உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

2 கோடி கிலோ உற்பத்தி சரிவால் பிராய்லர் கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.20 உயர்வு
X

Namakkal news-பிராய்லர் கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.20 உயர்வு (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- ஒரே வாரத்தில், 2 கோடி கிலோ உற்பத்தி சரிவு காரணமாக, பிராய்லர் கறிக்கோழி கொள்முதல் விலை, 4 நாளில், கிலோ ஒன்றுக்கு ரூ. 17 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் 30 லட்சம் கிலோ அளவிற்கு, கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்து, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை.

கடந்த, 1ம் தேதி, உயிருடன் ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ. 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏற்றம், இறக்கம் காணப்பட்ட நிலையில், 7ம் தேதி ரூ. 103 என நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, 8ம் தேதி, ரூ. 10 ரூபாய் அதிகரித்தது. 9ம் தேதி ரூ. 118 என, படிப்படியாக அதிகரித்தது. இந்த நிலையில், நேற்று, மேலும், ரூ. 2 அதிகரித்து, ஒரு கிலோ ரூ. 120 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பிராய்லர் கோழி கொள்முதல் விலை, நான்கு நாட்களில், ஒரு கிலோவுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையின்போது, விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு, 5 வாரத்துக்கு முன்பே, பண்ணைகளில் புதிய கோழிக்குஞ்சுகள் விடுவதை குறைத்துள்ளனர். அதனால், வரும், 16ம் தேதி வரை, ஒரு வாரத்திற்கு, கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தமிழகத்தில் வாரம் ஒன்றுக்கு 4.50 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், தற்போது, 2 கோடி கிலோ உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், விரைவில், ஈஸ்டர் விரதம் துவங்க உள்ளதால், விற்பனை சரிவடைய வாய்ப்புள்ளது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், உற்பத்தியும், கோழியின் எடையும் குறையவும் வாய்ப்பு உள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது என அவர் கூறினார்.

Updated On: 12 Feb 2024 7:15 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  இயற்கை வழிகளில் யூரிக் அமில அளவைக் குறைப்பது எப்படி?
 2. திருப்பூர் மாநகர்
  மார்ச் 1ல், திருப்பூரில் நிட்டெக் -2024 பின்னலாடை இயந்திரக் கண்காட்சி
 3. இந்தியா
  வாரணாசியில் பிரதமர் மோடி இன்று என்ன செய்யப்போகிறார்?
 4. காஞ்சிபுரம்
  அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்த்த காஞ்சிபுரம் வருவாய்...
 5. திருவள்ளூர்
  கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் தமாகா தலைவர் ஜி கே.வாசன்...
 6. இந்தியா
  மாலத்தீவு பகுதியில் சீன உளவு கப்பல். ஆராய்ச்சி கப்பல் என்கிறது சீனா
 7. திருச்செந்தூர்
  கோலாகலமாக நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி...
 8. இந்தியா
  மைத்தி இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த உத்தரவு: திரும்பப்...
 9. இந்தியா
  சாலை விபத்தில் உயிரிழந்த தெலுங்கானா எம்எல்ஏ லாஸ்யா நந்திதா
 10. இந்தியா
  நாடாளுமன்ற தேர்தல்: சென்னையில் தலைமை தேர்தல் கமிஷனர் இன்று ஆலோசனை