Raayan தலைகீழாக மாறிய டிரெண்ட்..! அசுரன் பட காப்பியா?

Raayan தலைகீழாக மாறிய டிரெண்ட்..! அசுரன் பட காப்பியா?
X
படத்தை பலரும் கழுவி ஊற்றி வருவதால், படம் சராசரியான வெற்றியைப் பெறும் என்றே கூறப்படுகிறது.

தனுஷ் எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த ராயன் திரைப்படம் மதிய காட்சிக்கு பிறகு எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தை பலரும் கழுவி ஊற்றி வருவதால், படம் சராசரியான வெற்றியைப் பெறும் என்றே கூறப்படுகிறது.

குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு பிறகு முக்கியமான ஒரு விசயமாக டவுணுக்கு செல்கிறார்கள் ராயனின் பெற்றோர்கள். ராயன் தன் இரண்டு தம்பிகளையும் சில மாதங்களுக்கு முன் பிறந்த தங்கையையும் பார்த்துக்கொள்கிறான். இரவுக்குள் வந்து சேர்வதாக கூறிவிட்டு செல்கின்றனர் தந்தையும் தாயும். பால் குடிக்கும் குழந்தையையும் சிறுவயது தம்பிகளையும் பார்க்கும் பொறுப்பு தனுஷுக்கு வருகிறது.

சாப்பாடு செய்து தம்பிகளுக்கு கொடுத்து, பசுமாட்டிலிருந்து பால் கறந்து காய்ச்சி தங்கைக்கு பாட்டிலில் அடைத்து கொடுத்து பார்த்துக்கொள்கிறான் ராயன். இரண்டு நாட்களாகிறது. அவனுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் தாயும் தந்தையும் வீடு திரும்பவில்லை என அந்த ஊர் பூசாரி வீட்டுக்கு கைக்குழந்தையையும், தன் இரு தம்பிகளையும் அழைத்துச் செல்கிறான்.

அந்த கும்மிருட்டில், இரவு வேறு எங்கேயும் செல்லவேண்டாம் என்று சொல்லி அங்கேயே தங்க சொல்கிறான் பூசாரி. ஆனால் இரவு தூக்கம் வராமல் தம்பி, தங்கையை பார்த்துக்கொண்டு இருக்கிறான் ராயன். அந்த நேரம் பூசாரி பெண் குழந்தையை விலை பேசி விற்க ஆளையும் கூட்டி வந்துவிடுகிறான். இதனை அறிந்த ராயன், தன் தம்பிகளையும் தங்கையையும் அங்கிருந்து கூட்டிச் சென்றுவிட நினைக்கிறான். ஆனால் பூசாரி உள்ளே வந்துவிட பூசாரியை எதிர்த்து நிற்கிறான் ராயன்.

ராயன் பூசாரியை எதிர்த்து நிற்க, அவர்களுக்குள் வாக்குவாதம் பின் கைகலப்பும் நடக்கிறது. பூசாரியை வெட்டிவிட்டு தன் தம்பி தங்கையுடன் தப்பிக்கிறான் ராயன்.

தப்பிக்க நினைத்து ஏறிய லாரி சென்னையில் வந்து இறங்கியதும் சேகர் எனும் வியாபாரியின் அறிமுகம் கிடைக்கிறது. அவன் மூலம் ராயன் தம்பி தங்கைகளின் வாழ்வில் புதிய வெளிச்சம் பிறக்கிறது. வேலை வாங்கி தருகிறார் சேகர். பின் வீடும் பார்த்து குடிவைக்கிறார்.

ராயன், தம்பி, தங்கை அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகி, ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்து பிழைக்கிறார்கள். வீட்டைப் பார்த்துக் கொள்வது துர்காவின் பொறுப்பு. ராயனும் தம்பிகளும் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். கடைசி தம்பி மாணிக்கவேல் ராயன் கல்லூரியில் படித்து வருகிறான்.

கல்லூரியில் அவன் தேர்தலில் நிற்க, அவனுக்கும் எதிர் தரப்பினருக்கும் சண்டை. பாரில் முத்துவேல் ராயன் குடித்துவிட்டு சண்டை போடுகிறான். தங்களது கடையைக் கேட்டு வரும் ஒருத்தனை மண்டையில் பீர் பாட்டிலால் அடித்து உடைத்து விட, அது போலீஸ் கேஸாகிவிடுகிறது. முதலில் அந்த ஏரியாவில் பெரியவரான துரை அண்ணனுக்கும் விசயம் தெரிந்துவிட, சேகரையும் கூட்டிக்கொண்டு, ராயன் துரை அண்ணனிடம் நடந்ததைக் கூறி மன்னிப்பு கேட்கச் செல்கிறான்.

துரை அண்ணன் அந்த ஏரியா ஐட்டங்காரன். பெரிய ஆள் என்பதால் அவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. அவனிடம் கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு, திரும்புகையில் முத்துவை போலீஸ் கைது செய்து அழைத்து சென்றுவிடுகிறது. அங்கேயும் செல்ல, போலீஸ் பாதிக்கப்பட்டவரைப் பார்த்து வாபஸ் வாங்கச் சொல் என்று சொல்லிவிடுகிறார்கள். ஒரு வழியாக கேஸை வாபஸ் வாங்கச் செய்து முத்துவை வெளியில் கொண்டு வருகிறான் ராயன்.

முத்துவுக்கும் அங்கே கடையில் வேலை செய்யும் மேகலாவுக்கும் இடையே காதல் டிராக் ஓடிக்கொண்டிருக்கிறது.

தங்கைக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ராயன் அதற்காக பணம் சேர்க்கிறான். கொஞ்சம் நகையும் சேர்க்கிறான். பின் பத்தாது என்று தன் கடையையும் எழுதி வைக்கிறான். இதனால் முத்துவுக்கும் ராயனுக்கும் கொஞ்சம் மனஸ்தாபம் ஏற்படுகிறது. ஆனால் அண்ணனை எதுவும் செய்யமுடியாது என்று விடுகிறான்.

இளையவன் மாணிக்கம் தேர்தலில் நிற்பதை எதிர்க்கும் எம்எல்ஏ பையன் போலீஸ், கொண்டு மிரட்டுகிறான். அதனால் பிரச்னை வேண்டாமென்று ராயன் அவனை வாபஸ் வாங்க சொல்கிறான். இதில் கடைசி தம்பி மாணிக்கத்துக்கும் மனஸ்தாபம். ஆனால் அண்ணனை எதுவும் செய்யமுடியாது என்று அவனும் விட்டுவிடுகிறான்.

தங்கைக்கு திருமணம் நெருங்குகையில், முத்து குடித்துவிட்டு பாரில் இருக்க, மேகலா அவனை அசிங்கப்படுத்திவிட்டு செல்கிறாள். தன் தந்தையை நடுரோட்டில் அசிங்கமாக பேசி ஆடையை உருவியதால் கோபத்தில் அடித்துவிடுகிறாள். இதனை அங்கு வந்திருந்த துரை அண்ணன் மகன் மற்றும் மற்ற நண்பர்கள் கேலி செய்யவே, கைகலப்பு ஏற்பட்டுவிடுகிறது. முத்து துரை அண்ணன் மகனையும் கொன்றுவிடுகிறான்.

இது தெரிந்து துரை அண்ணன் ராயனுக்கு கால் செய்ய, அவனுக்கு ஒரு நாள் டைம் கொடுக்கிறான். அதற்குள் ராயன் அவனது தம்பியைக் கொண்டு வந்து விட்டுவிடவேண்டும். இல்லையென்றால் மொத்த குடும்பத்தையும் கொன்று விடுவதாக கூறுகிறான் துரை.

துரை வீட்டில் துக்கம் நடந்துகொண்டிருக்கையில், இரவில் கரண்ட் கட் ஆகிவிடுகிறது. திடீரென அவனது அடியாள்களை யாரோ அடித்து பின்னி எடுக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது சம்பவம் செய்வது ராயனும் அவன் தம்பிகளும் என்று. துரையையும் கொன்றுவிட்டு அந்த பழியை சேது மீது தூக்கி போட, சேதுவுக்கு ராயன் மேல் சந்தேகம் எழுகிறது.

சேது, ராயனை தன்னுடன் சேர கேட்கிறான் ஆனால் ராயன் மறுத்துவிடுகிறான். இதனால் அவனுக்கும் ராயனுக்கும் இடையில் பிரச்னை. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு ராயனின் தம்பிகளை சூழ்ச்சி செய்து தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான். அவனுங்களுக்கே தெரியாமல், அவர்களின் அண்ணனை கொல்ல ஆள் அனுப்புகிறான்.

அடுத்த நாள் காலையில் திருமணம். சேதுவை கொன்றால்தான் நிம்மதி என ராயன் அவனைத் தேடி போக அங்கு தங்கை துர்கா கடத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறாள். அந்த இடத்தில் ராயன் மற்றவர்களை துவம்சம் செய்த, தம்பிகளால் குத்தப்பட்டு படுகாயமடைகிறான். தங்கையையும் எதிரிகள் கடத்திக்கொண்டு போக, ராயன் தடுமாறி கீழே விழ, தம்பிகள் தப்பித்து ஓட, அடுத்து என்ன ஆகும் என்பதே படத்தின் மீதி கதை.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!