உணவுப்பொருள் ஆய்வாளர் ஆய்வில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

உணவுப்பொருள் ஆய்வாளர் ஆய்வில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

புகையிலைப் பொருட்கள் (கோப்பு படம்)

குமாரபாளையத்தில் உணவுப்பொருள் ஆய்வாளர் ஆய்வில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில் உணவுப்பொருள் ஆய்வாளர் ஆய்வில் ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அருகே உள்ள பெட்டிக்கடை, பேக்கரி, மளிகை உள்ளிட்ட சுமார் 19 கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதில் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடையில் ஆய்வு செய்த போது, அதில், புகையிலை பொருளான குட்கா விற்பது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு, ஒரு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் உரிமையாளர் முகமது மஸ்தான் கைது செய்யப்பட்டார். இவரது கடை அடைக்கப்பட்டது. இதில் எஸ்.ஐ. டேவிட் உடனிருந்தார்.

இது குறித்து உணவுப்பொருள் அலுவலர் ரங்கநாதன் கூறியதாவது:

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை வஸ்து பொருட்கள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும். மேலும் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேக்கரிகளில் கலப்பட டீத்தூள், காலாவதியான குளிர்பானங்கள், ஓட்டல் கடைகளில் பழைய உணவுபொருட்கள், மளிகை கடைகளில் காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமைக்கப்பட்ட உணவுகளில் செயற்கை வண்ணம் சேர்க்க கூடாது. இவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story