தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
X
குமாரபாளையம் தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

குமாரபாளையம் தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் பல்லக்காபாளையம் பகுதயில் உள்ள தனியார் கல்லூரியில் தர்மபுரி மாவட்டம், பாயம் பகுதியில் வசிக்கும் சுரேந்தர், 18, என்பவர் பி.பார்ம் முதலாண்டு படித்து வந்தார். இவர் நேற்று காலை 06:00 மணியளவில் கல்லூரி விடுதி கழிவறையில் நைலான் கையிற்றால் தூக்கு மாட்டியபடி இறந்து கிடந்தார். இதனை கண்ட சக மாணவர்கள், கல்லூரி விடுதி வார்டன் சுதர்சனம் என்பவரிடம் கூறினர்கள். இது குறித்து பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் சடலத்தை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து வார்டன் சுதர்சனம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story