ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 2.80 லட்சம் பறிமுதல்

X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு

இக்குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

பவானி ரோட்டில் வாகன சோதனை

இந்நிலையில் பவானி ரோடு கிறிஸ்து ஜோதி பள்ளி அருகே பறக்கும் படையினர் அலுவலர் சரவணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

ரூ. 2.80 லட்சம் பணம் பறிமுதல்

அதில் ரூ. 2.80 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்த போது அவர் பவானி அடுத்த காலிங்கராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பது தெரிய வந்தது.

ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல்

ஆனால் அவரிடம் பணத்திற்குரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story