நாமக்கல் : மல்லசமுத்திரம் அருகே டிப்பர் லாரியில் 30 டன் கருங்கல் கடத்திய லாரி டிரைவர் கைது!
நாமக்கல் : மல்லசமுத்திரம் ஒன்றியம், தொட்டிப்பட்டி பகுதியில் இருந்து கருங்கல்பட்டி வழியாக கருங்கற்கள் கடத்துவதாக நாமக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காலை 7 மணியளவில், கருங்கல்பட்டி ஆலமரத்து பிரிவு ரோட்டில் சோதனை மேற்கொண்டார்.
டிப்பர் லாரி சோதனையில் சிக்கியது
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் 30 டன் கற்கள், அரசு அனுமதியின்றி, முறையான பர்மிட் இல்லாமல் கடத்தி வருவது தெரிய வந்தது.
லாரி ஓட்டுநர் கைது
இதையடுத்து, கற்கள் கடத்தி வந்த பாப்பம்பாளையம், மோளிபள்ளியை சேர்ந்த ராஜா(32) என்பவரை, எலச்சிபாளையம் போலீசில் தனி வருவாய் ஆய்வாளர் ஒப்படைத்தனர்.
வழக்குப்பதிவு மற்றும் லாரி பறிமுதல்
எலச்சிபாளையம் எஸ்ஐ செல்வம் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தார்.தொடர்ந்து, ராஜாவை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu