/* */

தூர்வாரும் பணிகளில் துளி அளவு கூட முறைகேடு நடக்க கூடாது: ஆய்வின் போது செயலாளர் பேட்டி

தூர்வாரும் பணிகளில் துளி அளவு கூட முறைகேடு நடக்க கூடாது ; நாகையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா பேட்டி.

HIGHLIGHTS

தூர்வாரும் பணிகளில் துளி அளவு கூட முறைகேடு நடக்க கூடாது:  ஆய்வின் போது செயலாளர் பேட்டி
X

பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா ஆய்வு மேற்கொண்ட போது.

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தூர் வாரும் பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்சேனா தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து நாகை அருகே பனங்குடி, திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் ரூ.6290.50 லட்சத்தில் 589 பணிகள் கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் 89 பணிகள் மூலம் 574.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.525.40 லட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 62 பணிகள் தொடங்கப்பட்டு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், மீதமுள்ள பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தூர்வாரும் பணியில் துளி அளவு கூட முறைகேடு நடக்காமல் இருக்க உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பணிகள் விரைவாகவும் அதே நேரத்தில் தரமானதாகவும் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Updated On: 5 Jun 2021 4:19 AM GMT

Related News