/* */

நாகையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது

நாகையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

நாகையில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
X

நாகையில் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட மூவர்.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நாகையை அடுத்த பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில் நாகப்பட்டினம் நகர காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் வந்துள்ளனர்.

அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்கள் கொண்டுவந்த மூட்டையை சோதனையிட்டனர். மூட்டையில் 21கிலோ கஞ்சா இருப்பது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மூவரிடம் விசாரணை மேற்கொண்டதில் வேதாரண்யத்தை அடுத்த நாலுவேதபதி சேர்ந்த ரெங்கநாதன், கருப்பம்புலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் தோப்புத்துறையை சேர்ந்த ஹலித் என்பது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டை மற்றும் இருசக்கர வாகனம்.

இவர்கள் வேதாரண்யத்தில் இருந்து நாகையில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 6 Dec 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...