மதுரையில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு

மதுரையில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு
X

மதுரை மீனாட்சியம்மன் கோயில், அன்னதானத்தை பார்வையிட்ட சட்டமன்ற உறுதிமொழிக் குழு.

சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி குழு தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் (பன்ருட்டி) தலைமையில், சட்டமன்ற குழு உறுப்பினர்கள் ஐ.கருணாநிதி (பல்லாவரம்), ரூபி ஆர்.மனோகரன் (நாங்குனேரி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்),பி.ராமலிங்கம் (நாமக்கல்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் "நாள் முழுவதும் அன்னதானம்" திட்டம் செயல்பாடு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் மா சௌ.சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், கோயில் துணை ஆணையாளர் அருணாச்சலம் உள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் மூலம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் ரூ.174.56 கோடி மதிப்பீட்டில் பெரியார் பேருந்து நிலையம் வளாகத்தில் 474 கடைகள் மற்றும் வாகன நிறுத்தம் வசதியுடன் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் கட்டுமான பணிகளின் தரம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Next Story