மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கு: ஆட்சியர் எச்சரிக்கை
![மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கு: ஆட்சியர் எச்சரிக்கை மதுரை வைகை ஆற்றில் வெள்ள பெருக்கு: ஆட்சியர் எச்சரிக்கை](https://www.nativenews.in/h-upload/2022/08/28/1583706-img-20220828-wa0024.webp)
மதுரை 37 வந்து வார்டு, சித்தி விநாயகர் தெருவில் குளம் போல தேங்கிய மழை நீர்.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பணிக்கு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.வைகை அணையில் இருந்து 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் யாரும் வைகை ஆற்றில் குளிக்க வேண்டாம் என்றும், மாடு, ஆடுகளை வைகை ஆற்றில் இறங்கி குளிக்க வைக்க கூடாது என, மதுரை மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பலத்த மழையால், மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல காட்சி அளிக்கிறது. வண்டியூர் கண்மாயில் மடைகள் வழியாக நீர் வெளியேறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu