மதுரையில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான்: ஆட்சியர் தொடக்கம்
![மதுரையில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான்: ஆட்சியர் தொடக்கம் மதுரையில் போதைப் பொருள் தடுப்பு மாரத்தான்: ஆட்சியர் தொடக்கம்](https://www.nativenews.in/h-upload/2022/08/28/1583719-img-20220828-wa0046.webp)
மதுரையில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பினாக்கிள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள்
மதுரையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்காக பினாக்கிள் ஹாஃப் மாரத்தான் ஓட்டத்தில் 2000 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பினாக்கிள் மதுரை ஹாஃப் மாரத்தான் - மாற்றத்திற்காக ஓடுங்கள் என்னும் பிரச்சாரத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் மதுரையின் மிகச்சிறந்த ஓட்டத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் பதிப்பு மாரத்தான் ஓட்டம் மதுரை மாநகர காவல்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் யங் இந்தியன்ஸ் ஆகியோர் இணைந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை, மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனிஷ் சேகர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிம்ரஜீத் சிங் கலான் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
4 ஓட்டப் பிரிவுகளாக நடத்தப்பட்டது.8 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண் பெண் கலந்து கொண்ட 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ. என மராத்தான் நடைபெற்றது.இந்த ஓட்டமானது ரேஸ் கோர்ஸ் சாலை எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி, அழகர்கோவில் சாலையில் பல வகை சுழல்களுக்குப் பிறகு அதே இடத்தில் (ரேஸ்கோர்ஸ்) முடிவடைந்தது.
ஓட்டப் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டன. இது தமிழ்நாடு தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 10கிமீ மற்றும் 21கிமீ பங்கேற்பாளர்களுக்கு டைமிங் சிப் மற்றும் இ-சான்றிதழுடன் அவர்களின் ஓட்ட நேரங்கள் தானிங்கி முறையில் குறிக்கப்பட்டிருந்தது.
போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்கவும், போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மாற்றத்திற்காக போதை பொருள் உபயோகிப்பதை தவிர்க்க செய்வதே இந்த மாரத்தான் ஓட்டத்தின் பிரதான பிரசார நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது.
மாரத்தான் ஓட்டத்துக்கான ஏற்பாடுகளை, பினாக்கிள் இன்போடெக் டிஜிஎம் பங்கஜ்குமார், ஏஜிஎம் மணிகண்டன், சோலமலை குழும கல்வி நிறுவனங்களின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் அரவிந்த் சோலமலை பிச்சை, எய்ட் ஓ எய்ட் நிறுவனர் ஹர்ஷ் கார்க், இணை நிறுவனர் ரோகன் சன்கோயி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu