கொரோனா காலத்தில் ரோட்டரியின் பங்கு பாராட்டுக்குரியது: முன்னாள் அமைச்சர் பேச்சு

கொரோனா காலத்தில் ரோட்டரியின் பங்கு பாராட்டுக்குரியது:  முன்னாள் அமைச்சர் பேச்சு
X

முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஓகேசேனல் எக்ஸலன்ஸ் அவார்டு(vocational exalance award) என்ற சிறப்பு விருதினை ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி மற்றும் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் இணைந்து வழங்கினர்.

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் தனது சேவையால் மக்கள் மனதில் குறிப்பாக ஏழை எளியவர் மனதில் நிறைந்துள்ளது

கொரோனா காலகட்டத்தில் ரோட்டரி சங்கங்களின் சேவை மிகவும் பாராட்டுதலுக்கு உரியதாக இருந்தது என்று, மதுரையில் நடைபெற்ற ரோட்டரி சங்க விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர். பி .உதயகுமார் பேசினார்.

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சிறப்பு கூட்டம் ,மதுரை யூனியன் கிளப் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு ,மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ் நாகரத்தினம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு ,தமிழக முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அவருக்கு, மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஓகேசேனல் எக்ஸலன்ஸ் அவார்டு(vocational exalance award) என்ற சிறப்பு விருதினை ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி மற்றும் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் இணைந்து வழங்கினர்.

நிகழ்வில் , ஆட்டோவில் தவறவிட்ட பயணியின் 20 பவுன் நகையை போலீஸ் நிலையம் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த மதுரை ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரனுக்கு, முன்னாள் அமைச்சர், சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின்பு கல்வியில் பொருளாதாரத்தில் நமது நாடு 15% இருந்தது. இன்றைக்கு பன்மடங்கு உயர்ந்து வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா திகழ்கிறது.

குறிப்பாக, அரசு ஒரு புறம் மக்களுக்கு திட்டங்கள் செய்தாலும ரோட்டரி சங்கங்கள் போன்ற சமூக இயக்கங்கள் மக்களுக்குசேவை யாற்றி வருகின்றன.குறிப்பாக ,கொரோனா காலகட்டத்தில் ரோட்டரி இயக்கத்தின் பணி மகத்தான தாக அமைந்தது.அன்றைய கொரோனா முதல் அலையின் பொழுது அரசின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வந்த போதிலும் அரசுடன் இணைந்து மருத்துவ உபகரணங்களை ரோட்டரி சங்கங்கள் வழங்கியது பாராட்டுதலுக்குரியது .டாட்டா, அதானி, அம்பானி போன்ற நிறுவனங்கள் தங்கள் வருவாயில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க நிதி ஒதுக்க வேண்டும் என்று விதி உள்ளது.

மக்களுக்காக முழு அர்ப்பணிப் புடன் சேவை பற்றி வரும் பொழுது மக்களிடத் தில் நிலைத்து இருப்போம். மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் தனது சேவையால் மக்கள் மனதில் குறிப்பாக ஏழை எளியவர் மனதில் நிறைந்துள்ளது என்று கூறினார்.முடிவில், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க செயலாளர் நெல்லை பாலு நன்றி கூறினார்.

Tags

Next Story