இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய நிறுவனத்தின் மீது போலீஸில் புகார்

இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய நிறுவனத்தின் மீது போலீஸில் புகார்
X

பைல் படம்

இந்து கடவுள்களை இழிவுப்படுத்திய நிறுவனத்தின் மீது வழக்கறிஞர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்

இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் நிறுவனத்தின் மீது, நடவடிக்கை கோரி போலீஸில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

கிருஷ்ணன் - ராதை உடலுறவு புகைப்படத்தை விற்பனை செய்த "அமேஸான்" நிறுவனம் மீது வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல். எஸ்.முத்துக்குமார் தலைமையில் வக்கீல்கள். நீலமேகம், அமிர்தராஜ், ரமேஷ்குமார், மனோகரன், தங்கப்பாண்டி, காயத்ரி மற்றும் சமூக ஆர்வலர் அனுஅப்சரா ஆகியோர் ,மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகார் மனு விவரம்:

சமீப காலமாக, இந்தியாவில் தொழில் செய்து வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து, நமது உள்நாட்டு நிர்வாகங்களில் தலையிடுவதும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்திலும், மத வேற்றுமையை வளர்க்கும் நோக்கத்திலும் ஈடுபட்டு வருகின்றன.நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் இந்து சமுதாய மத மக்களின் மத நம்பிக்கையையும், இறை வழிபாட்டையும் சீர் குலைக்கும் மற்றும் கேலிக்கூத்தாக்கும் நோக்கத்துடனும், செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 19.8.2022 அன்று உலகம் முழுவதிலும் வாழும் இந்து சமுதாய மக்கள் கிருஷ்ணஜெயந்தி விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள். அப்போது "அமேஸான்" என்ற பன்னாட்டு நிறுவனம் இந்து கடவுள்களான ஸ்ரீ கிருஷ்ணா - ராதைதேவி இருவரும் ஆடையில்லாமல் முழு நிர்வாணமாக உடலுறவு கொள்வது போல் புகைப்படத்தை வெளியிட்டு விற்பனை செய்துள்ளனர். கிருஷ்ணனுக்கு மேனியில் நீல வர்ணம் பூசியது போலவும், தலையில் கிரிடம் வைத்தது போலவும், கிருஷ்ணஜெயந்தி அன்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால், அந்த நிறுவனம் இந்து கடவுள் கிருஷ்ணனையும் * ராதையையும்தான் அவ்வாறு வேண்டுமென்றே ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த அமேஸான் நிறுவனம் ஏற்கெனவே, கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்து கடவுள்களின் படத்தை கழிவறை கோப்பைகளிலும், காலணிகளிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளாடைகளிலும், பெண்கள் இறுக்கமாக அணியும் லெக்கீன்ஸ்களிலும், தனது தனிப்பட்ட வணிக லாப நோக்கத்திற்காக இந்து கடவுள்களின் படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வந்துள்ளது.

மேலும் நமது தேசிய கொடியின் வண்ணத்தில் காலணிகள் விற்பனை செய்து நமது தேசத்தை உலக நாடுகள் மத்தியில் அவமதிக்கும் செயலையும் செய்தது. இவ்வாறு இந்த நிறுவனம் நமது தேச ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும், மதவாதத்தை தூண்டி கலவரங்களை ஏற்படுத்த வேண்டுமென்ற கெட்ட எண்ணத்துடனும் தொடர்ந்து செயல் பட்டு வருகிறது.

இதுபோன்று ட்விட்டர் நிறுவனம் நமது நாட்டின் "லடாக்" பகுதி சீனாவில் இருப்பது போல் வரைபடம் வெளியிட்டு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொண்டது. ஆகவே, வணிகம் என்ற பெயரில் நம் நாட்டின் ஒருமைப் பாட்டையம், ஒற்றுமையையும் சீர்க்குலைக்க வேண்டும் மத கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து செயல் பட்டு வரும் இந்த "அமேஸான்" நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கூறப்ட்டுள்ளது.இந்த புகார் மனுவை பெற்று கொண்ட காவல் துறை ஆணையாளர் செந்தில்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story