மதுரை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

மதுரை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
X

தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ம மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் மதுரை மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது

மதுரை மாநகராட்சியில், சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

மதுரை மாநகராட்சி "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ம மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் - தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் சிறப்பான பங்களிப்பு ஆற்றிய தன்னார்வலர்கள் குடியிருப்போர் நலசங்கங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மருத்துவமனைகள் ஆகியோர்களுக்கு, மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதி செய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த "நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தொடங்கப்பட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் மற்றும் இப்பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதுரை மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தூய்மை இந்தியா திட்டம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகிய பணிகளுக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய தன்னார்வலர்கள் குடியிருப்போர் நலச்சங்கங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மருத்துவமனைகள் வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் பள்ளிகள், கல்லூரிகள், உணவகங்கள் ஆகியோர்களை கௌரவிக்கும் வகையில் மதுரை மாநகராட்சியின் சார்பில் மேயர், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, தூய்மைக்கான உறுதிமொழியினை மேயர் தலைமையில் அனைத்து பணியாளர்களும் ஏற்று கொண்டனர். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு போதைப் பொருள் மற்றும் குடிப்பழக்கத்தை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், உதவி ஆணையாளர்கள் அமிர்தலிங்கம், சையதுமுஸ்தபாகமால் சுரேஷ் குமார்,நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், மண்டலத் தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, சுவிதா, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர்தினேஷ் குமார், செல்லமுத்து அறக்கட்டளை நிர்வாகிகள்,சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் பிப். 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்