விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
![விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி](https://www.nativenews.in/h-upload/2023/01/24/1647652-img-20230123-wa0028.webp)
திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது
Vivekananda College Madurai -மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது.
கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அகத்தர உறுதிமைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் பாபு வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
கல்லூரிச்செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக சாத்தூர் ஸ்ரீ ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் ப.இராஜகுரு பங்கேற்றார்.
கல்லூரி அக தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் இராஜேஷ்கண்ணா "தேசிய தர நிர்ணயக் குழுவின்அளவுகோல் வாரியான அணுகுமுறை" என்ற என்ற தலைப்பில் பேசுகையில்; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.
1986இல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது.இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. என்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆய்ந்து பரிந்துரை அளித்தல் இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
கல்லூரியின் அனைத்து பேராசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் பாரதிராஜா நன்றியுரை வழங்கினார். வணிகவியல் உதவிப்பேராசிரியர் முனைவர் வடிவேல்ராஜா இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu