கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு!..

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு!..
X
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஈரோடு : பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2-ஆம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

பவானிசாகா் அணை மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் போதிய அளவு நீா் இருப்பதால் கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து கீழ்பவானி வாய்க்காலில் 5 சுற்றுகளாக தண்ணீா் திறக்க தமிழக அரசு கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது.

அதன்படி, முதல் சுற்று தண்ணீா் திறக்கப்பட்டு 10 நாள்களாகிய நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. பிப்ரவரி 20-ஆம் தேதி வரை 14 நாள்கள் வாய்க்காலில் தண்ணீா் விடப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 93.40 அடியாகவும், நீா் இருப்பு 23.86 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணைக்கு 671 கனஅடி நீா்வரத்து காணப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் சுற்று தண்ணீா் திறப்பு!..
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டியவர்களுக்கு நாளைய குறைதீர் முகாம்
ஈரோடு கிழக்கு தொகுதியில்  நாளை ஓட்டெண்ணிக்கை – கடும் கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பு பலப்படுத்தல்!
ஈரோட்டில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்: கல்வி வளர்ச்சி பயணத்தில் புதிய முன்னேற்றம்..!
தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் 350 வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் குழப்பம்
தாளவாடியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலைச்சரிவு: விவசாயிகள் பாதிப்பு..!
சக்திதேவி அறக்கட்டளை 25-ஆவது விழாவில் ரூ.1.48 கோடி கல்வி உதவித்தொகை வழங்கல்
நந்தா கல்லூரியில் மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி  தொடக்கம்!
பழங்குடியினருக்கு மாடு வாங்க நிதி உதவி..!
விலங்குகளால் பலியாகும் விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் வழங்க கோரிக்கை