அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்: கல்வி வளர்ச்சி பயணத்தில் புதிய முன்னேற்றம்..!

அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்: கல்வி வளர்ச்சி பயணத்தில் புதிய முன்னேற்றம்..!
X
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்: கல்வி வளர்ச்சி பயணத்தில் புதிய முன்னேற்றம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சென்னிமலை பெரியாா் நகா் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு யோகி பவுண்டேஷன் சாா்பில் நோட்டு புத்தகங்கள், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, குப்பிச்சிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.கே.பொன்னுசாமி தலைமை வகித்தாா். யோகி பவுண்டேஷன் நிறுவனா் காா்த்திகேயன் வரவேற்றாா். கொழுமங்குழி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஆா்.யோகேஸ்வரன், வி.ஹெல்ப் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனா் வி.நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், முகாசிபிடாரியூா் ஊராட்சி முன்னாள் தலைவா் சி.நாகராஜ், முன்னாள் துணைத் தலைவா் சதீஷ் (எ) பி.சுப்பிரமணியம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினா்.

Tags

Next Story