தமிழகத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
![தமிழகத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு தமிழகத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிப்பு: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு](https://www.nativenews.in/h-upload/2022/12/09/1627776-img-20221209-wa0037.webp)
மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார்
தமிழகத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும், திமுக அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து, மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது:
திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, 40,000 போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால், உயர்த்தாத விலைவாசி உயர்வுக்கு தான் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தினார். திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த அம்மா ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து வரி உயர்வு இல்லை, அப்போது, மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை எடப்பாடியார் சுமத்தவில்லை. தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது.புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திமுகவின் இருந்த பொழுது அங்கு அண்ணாயிசம் இல்லாததால், அதிமுகவை தொடங்கினார். ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் எம்ஜிஆர்ரை கையில் எடுத்து எம்ஜிஆரை பெரியப்பா என்று கூறுகிறார் .
திமுகவில், கருணாநிதியை முதலமைச்சராக எம்ஜிஆர் உழைத்தார். ஆனால் அவரைக் கட்சியை விட்டு நீக்கினார்கள். .உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை மனதில் வைத்து கொண்டதால்தான் தனியாக அதிமுகவை தொடங்கினார்.51 ஆண்டுகால அதிமுக மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டது பன்னீர்செல்வத்திடம் இருந்த கோவை செல்வராஜை எந்த கட்சியையும் சேர்க்கவில்லை. ஆனால் திமுக மட்டும் அவரை சேர்த்து கொண்டது. இதன் மூலம் திமுகவின் தகுதி எந்த அளவில் உள்ளது என்பது தெரிந்து விட்டது.
அதிமுகவில், இருந்த செந்தில் பாலாஜி, முத்துசாமி, கண்ணப்பன், ஏ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளனர். அண்ணாயிசம், அம்மாயிசம், எம்ஜிஆர்யிசம் ஆகியவை அதிமுகவிற்கு தான் சொந்தம். ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். புரட்சித்தலைவர், கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி தூக்கி ஏறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு, எம்ஜிஆர்யிசத்தை கையில் எடுத்து, திமுக செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார். கருணாநிதி காலாவதி ஆகிவிட்டதால், இன்றைக்கு எம்ஜிஆரை , ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
ஜி 20 மாநாட்டில் இந்தியா தலைமை பொறுப்பு ஏற்கிறது .இதற்காக பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று எடப்பாடியார் பங்கேற்றார். இதனால் எந்த அணியில் இருந்தும் சப்தத்தைே காணோம். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடியார் பங்கேற்றது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கௌரவமாகும்.
இன்றைக்கு, புயலும் மையம் கொண்டுள்ளது, முதலமைச்சரும் மதுரையில் மையம் கொண்டு உள்ளார். மதுரை மாநகராட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மதுரை மாநகராட்சிக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை. இதுவரை மதுரைக்கு ஒதுக்கிய நிதி குறித்து வெள்ளை அறிக்கை விட முதலமைச்சர் தயாரா ?.ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை எடப்பாடியார் உருவாக்கினார். திமுக அரசு ஒரு மருத்துவ கல்லூரியை கூட உருவாக்கவில்லை ஆனால், இன்றைக்கு மருத்துவமனையில் மருந்து மாத்திரைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி தந்துள்ளார். குறிப்பாக, 10,000 கோடி அளவில் மதுரை மாவட்டத்திற்கு திட்டங்களை தந்து மதுரையை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். ஆனால், இன்றைக்கு ஸ்டாலின் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. எடப்பாடியார் கொண்ட வந்த திட்டங்களைத் தான் ரிப்பன் வெட்டி திறக்கிறார்.
மேலும் ,தமிழக முழுவதும் திமுக அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடியார் கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.அந்த கூட்டமே விரைவில் நாம் ஆளுங்கட்சியாக மாறுவதற்கு அச்சாரமாக அமைந்துள்ளது என்றார் ஆர்.பி. உதயகுமார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர் அசோக், ஒன்றிய கழகச் செயலாளர் கொரியர் கணேசன் மற்றும் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu