வாடிப்பட்டி அருகே ரமணகிரி ஆசிரமத்தில் தொடர் ராம நாம ஜெபம்
சத்தி நாதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், பாலகுருநாதானந்தபுரி, வேதானந்த புரி ஸ்வாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீரமணகிரி ஆசிரமத்தில் நடைபெற்ற தொடர் ராமநாம ஜெபம்:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சி சிறுமலை அமைந்துள்ளது பகவான் ரமணமகரிஷியின் சீடரான ரமணகிரி ஜீவசமாதி பீடம் உள்ளது.
ஸ்வாமி ரமணகிரி ஆஸ்ரமம் மற்றும் கோவை சத்ஸங்க சமிதி சார்பாக நாள் முழுவதும் ஸ்வாமி அமிர்தேஸ்வரனானந்தா, கோவை ஸ்ரீமிதி பிரமிளா புருஷோத்தமன், ரமண பிரசாதனந்தகிரி ஆகியோர் தலைமையில் தொடர் ராமநாம ஜெபம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ,கோவை, திண்டுக்கல் சேலம், கரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்து அமைதி காத்து பொறுமையுடன் கலந்து கொண்டு ஸ்ரீராம நாமத்தை பாடினர். இதில், சத்தி நாதானந்த சரஸ்வதி ஸ்வாமிகள், பாலகுருநாதானந்தபுரி, வேதானந்த புரி ஸ்வாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, வந்திருந்த பக்தர்கள் அனைவர்க்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu