/* */

தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

தேவர் ஜெயந்தி: கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
X

தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருக்கின்றனர்.

தேவர் குருபூஜை விழாவையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி , ராஜ கண்ணப்பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் பல இடங்களில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இன்று லாரிகள் மற்றும் கனகர வாகனங்கள் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாக நுழைய தடை செய்யப்படுகிறது.

விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கிவரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.

நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் திரும்பி மாற்று பாதையாக கக்கன்சிலை, ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர் மெயின் ரோடு, பி.டி.ஆர். பாலம், காமராஜர் சாலை வழியாக செல்லவேண்டும்.

மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பு ஆகிய பகுதிகளிலிருந்து நத்தம் ரோட்டிற்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், அவுட் போஸ்ட், பாண்டியன் ஓட்டல், தாமரைத்தொட்டி, புது நத்தம் ரோடு வழியாக செல்லவேண்டும்.

வடக்குவெளி வீதியிலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேஷன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், பெரியார் மாளிகை வழியாக செல்ல வேண்டும்.

மேலமடைபகுதியிலிருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள், ஆவின் சந்திப்பிலிருந்து குருவிக்காரன் சாலை வழியாக நகருக்குள் செல்லவேண்டும்.

குறிப்பாக, தேவர் ஜெயந்தி விழாவிற்காக பசும்பொன் செல்லக்கூடிய பிறமாவட்ட வாகனங்கள், நகருக்குள் செல்ல காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாகச் செல்லவேண்டும்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களின் நலன் கருதி இதில் குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதைகளை தற்காலிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்த விதமான விதிமீறலிலும் ஈடுபடாமல் முறையாக சாலைகளில் பயணிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Updated On: 30 Oct 2022 2:53 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்