மதுரையில் வரதட்சணையின்றி நடந்த சுயம்வர நிகழ்ச்சி

மதுரையில் வரதட்சணையின்றி நடந்த சுயம்வர நிகழ்ச்சி
X

மதுரையில் நடைபெற்ற  வரதட்சணை இன்றி திருமணம் செய்துகொள்வதற்கான சுயம்வரம் நிகழ்ச்சி

மதுரையில் வரதட்சணை இன்றி திருமணம் செய்துகொள்வதற்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை அண்ணாநகர் பகுதியில், பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனி அமைப்பின் சார்பில் வரதட்சணை இன்றி திருமணம் செய்துகொள்வதற்கான சுயம்வரன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ,500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்களது வீட்டில் உள்ள மகன், மகள்களுக்கு தேவையான மணமகன், மணமகள் குறித்து நேரடியாக பெற்றோரிகளிடம் கேட்டறிந்துகொண்டனர்.பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்ட பின்னர், உரிய தகுதிகளை பெற்றுக்கொண்டு அங்கு கேட்கப்படும் வரதட்சணை பெற மாட்டேன் உள்ளிட்ட 21கேள்விக்களுக்கும் உரிய பதில் பெறப்பட்டு அதற்கான உறுதி்சான்றில் பெற்றோர்கள் இருவரிடமும் கையெழுத்து பெறப்படுகிறது.

இதனையடுத்து, இரு வீட்டாருக்கும் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், மணமக்களை நேரடியாக சந்தி்த்து திருமணம் குறித்து ஒருவொருக்கொருவர் பேசிக்கொண்டனர்.இதில் ,மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

இதுபோன்று இஸ்லாமிய சமூகத்தை பெண்களுக்கான மறுமணம், அதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கான வரன் போன்றவையும் நடத்தப்பட்டது.இதில், மறுமணம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணம் உறுதிசெய்யப்பட்டால் அந்த திருமணத்திற்கான திருமண செலவுகளை நிக்காஹ் மேட்ரிமோணி் அமைப்பினரை ஏற்கின்றனர்.

வரதட்சணை கொடுமையால் நாளுக்கு நாள் பெண்கள் அதிகளவிற்கு பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையிலும், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள் பயன்பெறும் வகையிலும் இதுபோன்ற சுயம்வரன் நிகழ்ச்சி நடைபெறுவது இஸ்லாமியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்று நடைபெற்ற சுயம்வரன் நிகழ்ச்சியில் 200பேருக்கு திருணம் செய்வதற்கான சம்மதம் பெறப்பட்டு திருமணம் உறுதி செய்யப்பட்டது. இந்த சுயம்வரன் நிகழ்வில் , எந்தவித கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Tags

Next Story
நாமக்கல் மாவட்டத்தில் பிப். 19-ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்