/* */

தற்காலிக செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் பணியை நீட்டிக்கக்கோரி மனு

கிருஷ்ணகிரியில் தற்காலிக செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் பணியை நீட்டிக்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தற்காலிக செவிலியர்கள், பல்நோக்கு பணியாளர்கள் பணியை நீட்டிக்கக்கோரி மனு
X

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தற்காலிக செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள். 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், தற்காலிக செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு பணியாளர்கள் பணியை நீட்டிக்க கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், மத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை பணிகளில் 20 தற்காலிக செவிலியர்களாக கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டோம். கொரோனா உச்சமாக இருந்த கால கட்டத்தில், நாங்கள் 24 மணி நேரமும் உயிரை பணயம் வைத்து பணி செய்தோம்.

கொரோனா குறைந்ததும், எங்களை எந்த முன் அறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்கிவிட்டனர். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கடந்த மாதம் 26ம் தேதி பணி நீட்டிப்பு கோரி மனு அளித்ததற்கு, வரும் டிசம்பர் வரை பணியை நீட்டிப்பதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது எங்களை பணியில் இருந்து நீக்கிவிட்டனர். எனவே எங்களுக்கு பணியை நீட்டித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், கடந்த மே மாதம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனா பணியில் தற்காலிக பல்நோக்கு பணியாளர்கள் 29 பேர் நியமிக்கப்பட்டனர். ஆனால் எங்களையும் எந்த முன் அறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்கி விட்டனர். எனவே எங்களுக்கும் பணியை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பல்நோக்கு பணியாளர்களும் மனு அளித்தனர்.

Updated On: 18 Aug 2021 3:45 PM GMT

Related News