/* */

கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் மின்வாரிய தொழிற்சங்களின்   கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
X

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் 

https://www.instanews.city/preview/story-434890

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்சார சட்ட திருத்தம் 2021ஐ கைவிட கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச பசவராஜ், சிஐடியூ கருணராநிதி, சம்மேளம் தாவீது, பொறியாளர் சங்கம் சரவணன், ஐக்கிய சங்கம் திருமலைவாசன், அண்ணா தொழிற்சங்கம் நாகராஜ் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரே வீதியில் பல தனியார் நிறுவனங்கள் மின் வினியோகத்தில் ஈடுபட்டு மின் வினியோகத்தை நாசம் செய்திடவும்,

அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் மாநில உரிமை பறித்திடவும், லாபத்தை மட்டுமே கொண்ட சந்தை பொருளாக மின்சாரத்திதை மாற்றிடவும்,

நடைபெறவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் சட்டமாக்கவுள்ள மின்சார சட்டம் 2021 மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On: 21 July 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து