/* */

சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: அணை நீரை திறக்க ஆட்சியரிடம் மனு

சின்னாறு ஆற்றின் குறுக்கே நடைபெறும் பாலம் கட்டுமான பணி தடைபடாமல் இருக்க அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி: அணை நீரை திறக்க ஆட்சியரிடம்  மனு
X

அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் போகிபுரம் கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் இடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், போகிபுரம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தினர் அனைவரும் தங்களது அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் மற்றும் மாணவர்கள் கல்வி கற்பதற்கும் சின்னாறு ஆற்றைப் பரிசல் மூலம் கடந்து சூளகிரி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் சின்னாறு ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத் தர கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கன மழையால் சின்னாறு குறுக்கே கட்டப்பட்டு உள்ள சின்னாறு அனை 75 சதவீதம் நிரம்பி உள்ளது. இதனால் பாலம் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே சின்னாறு அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றியும், தற்காலிகமாக துரை ஏரியிலிருந்து சின்னாறு அணைக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தியும் பாலம் கட்டுமான பணியை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தனர்.

மேலும் இரண்டு மாதங்களில் பாலம் கட்டும் பணி முடிவடைந்து விடும். அதனை தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல் சின்னாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர்.

Updated On: 27 Dec 2021 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!