/* */

கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை

வாழை, மரவள்ளி, தக்காளி, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன் பெறலாம்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய மாவட்ட ஆட்சியர் அறிவுரை
X

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்.

விவசாயிகள் பருவ நிலை மாற்றத்தால் நஷ்டம் ஏற்படாமல் இருக்க தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் போது எதிர்பாராத காலநிலை மாற்றங்களால் இழப்பு ஏற்படுகிறது . தற்போது நிலவி வரும் பருவமழையில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிரினை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்வதன் மூலம் ஏற்படும் இழப்பினை தவிர்க்கலாம்.

எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் காப்பீடு செய்ய வாழை , மரவள்ளி மற்றும் தக்காளி பயிர்களுக்கு 28.02.2022 வரையிலும், வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்களுக்கு 31.01.2022 வரையிலும், விண்ணப்பிக்க பிரீமியம் தொகையாக ஏக்கர் 1-க்கு வாழைக்கு ரூ .3,198 / -ம் , வெங்காயத்திற்கு ரூ .1,952 / -ம் மரவள்ளிக்கு ரூ .1,509 / -ம் தக்காளிக்கு ரூ .801 / -ம் மற்றும் மிளகாய்க்கு ரூ .1,106 / -ம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது இ-சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மேலும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பயிர்களின் பரப்பளவு, இ-அடங்கலை பதிவு செய்தலை உறுதிபடுத்திக் கொள்ளேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Updated On: 13 Nov 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!