/* */

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேர் திருவிழா அரோகரா கோஷம் முழங்க விமரிசையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேரோட்டம்
X

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பூதலிங்கசுவாமி கோவிலில் மன்னர் கால பாரம்பரியமும், பிரசித்தியும் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைபெரும் திருவிழா நடைபெறுவதோடு, திருத்தேர் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டிற்கான தைபெரும் திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதோடு தேர் திருவிழா நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்வேறு இந்து இயக்கங்கள் மற்றும் பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருவிழாவை நடத்த தடை இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் இன்று பூதலிங்க சுவாமி கோவில் பாரம்பரிய தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கு பின்னர் விநாயகர், அம்பாள் மற்றும் சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர் தேரை சிறுவர்களும், அம்பாள் தேரை பெண்களும், சுவாமி தேரை அனைத்து தரப்பினரும் இழுத்தனர்.

முன்னதாக முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ் உள்ளிட்டோர் திருத்தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அதன்படி நடைபெற்ற தேர் திருவிழாவில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Updated On: 17 Jan 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்