/* */

விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி கூண்டு பாலம்!

அதன்படி 37 கோடி ரூபாய் செலவில் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

விவேகானந்தர் மண்டபத்திலிருந்து திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி கூண்டு பாலம்!
X

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் அமைந்துள்ளது உலகமே வியந்து பார்க்கும் திருவள்ளுவர் சிலை. அதன் அருகிலேயே விவேகானந்த மண்டபமும் இருக்கிறது. பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் மூலம் இங்கு படகு சவாரி செய்து செல்லமுடியும். முதலில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றால் அங்கிருந்து மீண்டும் படகு மூலம் விவேகானந்த மண்டபத்துக்கு செல்லவேண்டும். இதனால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றாலும் இதன் காரணமாக கூடுதல் செலவு ஆவதும் ஒரு கருத்தில் கொள்ளப்படவேண்டியதாக இருக்கிறது.

இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக இருக்கிறது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்துக்கு அருகே ஆழம் குறைந்த பகுதிகள் இருக்கின்றன. பாறைகளும் மிக அதிகமாக காணப்படுவதால் அங்கு படகுகளை இயக்குவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுகிறது.

இதன்காரணமாக நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், மற்ற நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் இங்கு செல்ல முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இதன்காரணமாக திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் பாலம் அமைக்க பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து தமிழக அரசு இந்த இரண்டு இடங்களையும் இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் ஒன்றை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி 37 கோடி ரூபாய் செலவில் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் மேலே, கீழே என கண்ணாடியால் செய்யப்பட்டிருப்பதால் கீழே கடலையும் கண்ணாடி வழியாக பார்க்கமுடியும் வகையில் வெளிநாடுகளில் இருப்பது போல அமைக்கிறார்கள்.

Updated On: 23 May 2023 5:59 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!