/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 ரவுடிகள் அதிரடியாக கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 82 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 82 ரவுடிகள் அதிரடியாக கைது
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னிட்டு பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு ரவுடிகள் மீது, தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்ட சுமார் 210 ரவுடிகள் வீடுகளை சோதனை செய்ததில், 8 கத்திகள் மற்றும் ஒரு இரும்பு ராடு கைப்பற்றப்பட்டது. அவர்களில் 82 ரவுடிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டு அவர்களில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 14 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்டும், *பிரிவு 110 கு.வி.மு.ச*- ன்படி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் அவர்கள் பரிந்துரையின்பேரில் வருவாய் கோட்டாட்சியர்கள் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகியோர்கள் *64 ரவுடிகளை* ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை பிறப்பித்துள்ளனர்.

மேலும், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த 4 ரவுடிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On: 24 Sep 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!