/* */

தேக்கமின்றி நெல் அரவை மேற்கொள்ள ஆலை அதிபர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல்லை விரைவாக எடுத்து அரவை செய்ய ஆலை அதிபர்களுக்கு அமைச்சர் தா. மோ அன்பரசன் வேண்டுகோள்

HIGHLIGHTS

தேக்கமின்றி நெல் அரவை மேற்கொள்ள ஆலை அதிபர்களுக்கு  அமைச்சர் வேண்டுகோள்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு மற்றும் உணவுப் பொருள் பயன்கள் துறை பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை பணிகள் தொடர்பான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட அரவை முகவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி முன்னிலை வகிக்க, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வே ராஜாராம் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் சங்கீதா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு அரிசி ஆலை அரவை முகவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் எடுத்தல் மற்றும் அரிசி ஒப்படைக்கும் இடத்தில் காலதாமதம் ஆவதால் போக்குவரத்து வாகனங்களின் செலவு பெருமளவு பாதிக்கப்படுவதாகவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தரமான நெல்களை அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், அங்கு கொள்முதலில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க அரசு அறிவுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், வட்டாரப் போக்குவரத்து அலுவலருடன் இணைந்து வாகன பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், அரசு கொள்முதல் நிலைய நெல் அரைக்காத அரவை ஆலைகளுக்கு கால அவகாசம் தருவதாகவும், அதை தவிர்க்கும் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

மேலும் தமிழகத்தில் உணவுப்பொருள் தரம் குறித்து அதிக விழிப்புணர்வு குக்கிராமத்திலும் உள்ளதால் அவர்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.. செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சத்யவதி மற்றும் காஞ்சி செங்கல்பட்டு மாவட்ட அரவை ஆலை உரிமையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Updated On: 18 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...