/* */

பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மேயர் அறிவுரை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 3 வட்டங்களில் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ் பாதாள சாக்கடை பணிகளை மேற்பார்வையிட்டார்

HIGHLIGHTS

பாதாள சாக்கடை பராமரிப்பு  பணிகளை தொடர்ந்து கண்காணிக்க மேயர் அறிவுரை
X

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உடன் மாநகராட்சி அலுவலர்கள் 

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை, சுகாதாரம் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாள்தோறும் கையாண்டு வருகிறது.

சுமார் ஒரு லட்சம் பேர் வசிக்கும் காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதை வடிகால் மூலம் கழிவுகள் செல்கிறது. மேலும் காஞ்சிபுரத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் அரிசி ஆலைகளும் பல்வேறு சாய கழிவு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகிறது.

இது மட்டும் இல்லாமல் பொதுமக்கள் பாதாள சாக்கடையில் பல்வேறு பகுதிகளில் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்து ஓடும் நிலை ஏற்படுவதாகவும் இது சுகாதார சீர்கேடு விளைவிப்பதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நாள்தோறும் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது.

மேலும் காஞ்சிபுரம் கோயில் நகரம் என்பதால் கோயில் சுற்றி பல்வேறு பகுதிகளில் ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்புகளால் கழிவு நீர் வெளியேறுவதால் பக்தர்கள் முகம் சுளிப்பதாகவும் தொடர் புகார்கள் வந்துள்ளது.


இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் இன்று ஒன்று ஒன்பது உள்ளிட்ட நான்கு வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு மற்றும் வழிந்தோடும் நிலையில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அடைப்புகளை சரி செய்து சாலையில் பயந்து ஓடாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் தொடர்ந்து இப்பகுதிகள் புகார் வரும் காரணம் மற்றும் அதனை சரி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பொறியாளர் குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் அளித்து வருவதால் கட்டட கழிவுகளும் இதில் சிக்கிக் கொண்டு பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளதாகவும் இதனை பணி மேற்கொள்ளும் ஊழியர்கள் முறையாக கையாள வேண்டும் எனவும், கழிவுநீர் வழிந்தோடுவது மாநகரின் அவலத்தை எடுத்துக் கூறும் வகையில் இருப்பதால் இதை அனைவரும் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் ஆணையரிடம் தெரிவித்தார்.

மேற்கண்ட மூன்று வார்டுகளிலும் கழிவு அடைப்பு பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டு அப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் கொண்டு தொற்று பரவாமல் இருக்க அனைத்து கழிவுகளும் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது

Updated On: 17 May 2023 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு