/* */

உழவர் சந்தையில் காய்கறி விலை: பட்டியலில் ஒன்று, விற்பனை விலை வேறு !!

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் காய்கறி விலைப்பட்டியலுக்கும், விற்பனைக்கு மாறுபாடு உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

HIGHLIGHTS

உழவர் சந்தையில் காய்கறி விலை:  பட்டியலில் ஒன்று,  விற்பனை விலை வேறு !!
X

காஞ்சிபுரம் உழவர் சந்தையில் விலைப்பட்டியல் தக்காளி விலை 75 எனக் குறிப்பிட்ட நிலையில் 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் தலைமை அஞ்சலகம் எதிரே அமைந்துள்ளது உழவர் சந்தை. தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக நாள்தோறும் இங்கு விவசாயிகள் பயிரிடப்படும் காய்கறிகளை இங்கு விற்பனை செய்து கொள்ள வழி வகுக்கும் வழியில் திமுக ஆட்சியில் பத்து வருடங்களுக்கு முன்பு நகரங்கள் தோறும் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலை பெயர்களை நேரடியாக பொதுமக்களுக்கு இங்கு உரிய கடைகளை பெற்றும் , அங்குள்ள அலுவலர்கள் அனுமதியுடனும் விற்பனை அங்காடி அமைத்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து நேரடி அதிக லாபம் பெறலாம் எனும் நோக்கி உருவாக்கப்பட்டது.

தற்போது இந்த உழவர் சந்தையில் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பண்ருட்டியில் இருந்து பலாப்பழ வியாபாரிகள் நேரடியாக இங்குள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்து மகிழ்ச்சியடைந்தனர்.

இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலைப்பட்டியல் அங்காடி முன்பு டிஜிட்டல் பேனரிலும் மற்றும் கடைகளின் முன்பு நாள்தோறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எழுதி வைப்பது வழக்கம்.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகையில் விலைப்பட்டியல் ஒளிபரப்பு இல்லாமல் உள்ள காட்சி.

இந்நிலையில் இன்று தக்காளியின் விலை ரூபாய் 10 உயர்வு கண்ட நிலையில், அங்கு தக்காளியின் விலை ரூபாய் 75 எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் விற்பதோ 120 ரூபாய். இதை பொதுமக்கள் கண்டு கொள்ளாமலே பொதுவெளியில் விற்பதை விட இங்கு ரூபாய் 40 குறைவாக உள்ளது என்பதால் அதையும் கண்டு கொள்ளாமல் பெற்று செல்கின்றனர் .

பொதுவாகவே விலைப்பட்டியை அன்று திருத்தம் செய்து அதை மீறி விற்பனை செய்வதை தடுத்தல் மற்றும் அங்குள்ள டிஜிட்டல் போர்டில் ஒளிபரப்பு செய்தல் எதையும் கண்டு கொள்ளாது அங்கு ஒரு வேளாண் துறை அலுவலர் இருப்பது கேள்விக்குறியாக உள்ளது.

Updated On: 29 July 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  6. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  7. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்