/* */

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெரும் மழை நீரை சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த ஆட்சியர்
X

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்த போது. 

வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெறும் மழை நீரை சேமித்தல் குறித்த கட்டமைப்பு முறைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல ஆண்டுகளாக மழை நீரை சேமித்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இன்னும் ஓரிரு மாதங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மழைநீரை சேகரிப்போம், நீர்வளத்தை மேம்படுத்துவோம் எனும் வாசகத்தை முன்னிறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மூங்கில் மண்டபம் வரை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்.

இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல் அதனை பராமரித்தல் வீடுகள் திறந்தவெளி கிணறு குழாய் கிணறு மற்றும் கசிவு நீர் குழிகள் அமைப்பின் மூலம் எவ்வாறு நீர் சேமிப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மொட்டை மாடிகளினை சுத்தப்படுத்துதல், மழை நீர் வடி குழாய்கள் அடைப்புகளை சரி செய்தல், வடிகட்டும் தொட்டி அமைத்தல், மழை நீர்சேமிப்பு தொட்டிகளில் நீர் செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகளையும் சரி பார்க்க கூறி கோஷங்கள் எழுப்பியவாறு மாணவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனம் மூலம் மழை நீர் சேகரிப்பு குறித்த குறும்படத்தை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் , உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்

மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்,எல்.இ.டி வாகனம் மூலம் நகர் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அலுவலர் செல்வராஜ் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 17 Oct 2023 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  3. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  5. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  6. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  7. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴 LIVE : தளபதி விஜய், தனுஷ், கமல் மீது விசாரணை வேண்டும் வீரலட்சுமி...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    Redmi Buds 5A: இசைப் பிரியர்களுக்கான சிறகுகள்